அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த இளைஞர்கள்: நிரந்தர வேலை வழங்ககோரி மனு
அரியலூர் - அரசு சிமெண்ட் ஆலையில் நிரந்தர வேலை வழங்க கோரி நிலம் கொடுத்த விவசாயிகள், குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அரியலூரில் உள்ள அரசு சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க ஆனந்தவாடி கிராமத்தில் 1983 ஆம் ஆண்டு ஏக்கருக்கு 2 ஆயிரத்து 300 ரூபாய் இழப்பீட்டுத்தொகை கொடுத்து 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கப்படும் என உறுதியளித்து நிலத்தை கையகப்படுத்தினர்.
ஆனால் இதுவரை யாருக்கும் நிரந்தர வேலை வழங்க வில்லை என கூறி அக்கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்க்கு வந்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியிடம் மனு அளித்தனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு வேலை வழங்க முதல்வர் ஸ்டாலின் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu