அரியலூரில் உலக புகையிலை ஒழிப்புதின விழிப்புணர்வு பேரணி
அரியலூர் மாவட்டத்தில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.
நம் இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, திருச்சி மத்திய கலால்துறை ஆணையரகம் சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அரியலூர் பேருந்துநிலையத்தில் துவக்கி வைத்தார். இப்பேரணி அரியலூர் பேருந்து நிலையத்தில் துவங்கி மார்கெட் வீதி, எம்.பி.கோவில் தெரு, வெள்ளாளர்தெரு, சின்னைக்கடை வீதி, இந்திரா காந்தி தெரு, இராஜாஜிநகர் 2-ஆம் வீதி, கல்லூரி சாலை செந்துறை சாலை, செந்துறை சாலை வழியாக மீண்டும் அண்ணாசிலையில் நிறைவடைந்தது.
இப்பேரணியில் கலந்துகொண்டவர்கள், புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. குட்கா, பான்பராக், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம், மஞ்சள்நிற பற்கள், இருமல், வாய்ப்புண், வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
இப்பேரணியில், திருச்சி மத்திய கலால்துறை ஆணையரக இணை ஆணையர் ஜெ.இளங்கோ மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu