அரியலூரில் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை

அரியலூரில் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை
X

பத்து  ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரத்தினம்.

அரியலூரில் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள வடவீக்கம் கிராமத்தை சேர்ந்த அன்புச்செல்வன் மனைவி கலைச்செல்வி(45). இவர் கடந்த 25.07.2016 அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொர்டர்பாக, அன்புச்செல்வன் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் தனது மனைவியிடம், அதே கிராமத்தை சேர்ந்த ரத்தினம்(59) என்பவர் தகாத முறையில் நடந்து கொண்டதால், அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் போலீசார் ரத்தினத்தை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த், பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய ரத்தினத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6மாதம் சிறைத்தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!