அரியலூர் எஸ்.பி. அலுவலகம் முன் கைக்குழந்தையுடன் பெண் திடீர் சாலை மறியல்

அரியலூர் எஸ்.பி. அலுவலகம் முன் கைக்குழந்தையுடன் பெண் திடீர் சாலை மறியல்
X

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்  கைக்குழந்தையுடன்  பெண் மறியல் செய்தார்.

அரியலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் முன் கைகுழந்தையுடன் பெண் திடீர் என நடத்திய சாலை மறியல் போராட்டத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பூனைக்கண்ணி தெருவை சேர்ந்த பாஸ்கரின் மனைவி சசிகலா. இவருக்கும் இவர்களது இடத்தில் கடை வைத்திருக்கும் சவுந்தர்ராஜன் என்பவருக்கும் கடையை காலி செய்வதில் பிரச்சினை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதுசம்மந்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. அலுவலகத்திலும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் இன்று தனது கைக்குழந்தையுடன் எஸ்.பி அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்.

இதனையறிந்த போலீசார் அந்த பெண் மற்றும் கைகுழந்தையை அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர். மேலும் இதுசம்மந்தமாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்