/* */

தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினராக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினர்களாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

HIGHLIGHTS

தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினராக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்
X

அரியலூர் கலெக்டர் ரமணசரஸ்வதி

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், கடந்த 2020- 2021 ஆம் ஆண்டுகளில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கொரோனா ஊரங்கு கால நாட்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போதும், பொங்கல் தொகுப்பு வழங்கும் போதும் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது.

தற்போது அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களை நலவாரிய உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட இணையதளத்தில் ஏற்கனவே நலவாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்து புதுப்பித்தல் இல்லாதவர்கள் ரீனிவல் (Renewal) என்ற பகுதியில் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த இணையதளத்தில் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்தவர்களை தவிர பழைய நடைமுறையில் புதுப்பித்தல் செய்தவர்கள் அப்டேசன் (Updation) என்ற பகுதியில் நுழைந்து ஆதார் எண், ஸ்மார்ட் கார்டு, வங்கி கணக்கு விபரங்களை வருகிற மார்ச் 31.03.2022-க்குள் இணைக்க வேண்டும்.

மேற்கண்ட விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலமே நலத்திட்ட உதவிகள் வழங்க ஏதுவாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 15 Feb 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...