அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை

அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை
X
அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்று பயனடைய அரியலூர் கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெற ஏதுவாக மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையினை (UDID) வருகின்ற மே மாதம் 06 தேதிக்குள் தேவையான ஆவணங்களான தேசிய அடையாள அட்டை நகல், முகம் மட்டும் தெரியகூடிய புகைப்படம் 4 (பாஸ்போர்ட் சைஸ்) ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தரைத்தளம், அறை எண்: 17, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture