கங்கைகொண்ட சோழபுரத்தில் நாளை ஆடித் திருவாதிரை விழா
பிரகதீஸ்வரர் திருக்கோவில் .
Gangaikonda Cholapuram Temple -அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபுரிந்த மாமன்னர் இராஜேந்திர சோழன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர், மாமன்னர் இராஜேந்திரன் சோழன் அவர்களின் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். அந்த வகையில் நாளை 26.07.2022 கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவிலில் ஆடித் திருவாதிரை விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.
மேலும், ஆடித்திருவாதிரை விழா காலை 08.00 மணிக்கு மங்கள இசையுடன் துவங்குகிறது. அதனைத்தொடர்ந்து காலை 10.30 மணியளவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு விழாவினைத் தொடங்கி வைத்து விழாப் பேரூரையாற்ற உள்ளார். மேலும், இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர். தொடர்ந்து பரத நாட்டியம், தப்பாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், கிராமிய நடனம், கட்டைக்கால் ஆட்டம், சிலம்பாட்டம், பள்ளி மாணவ, மாணவியர் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இரவு வரை நடைபெறவுள்ளது.
ஆடித்திருவாதிரை விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வசதிக்காக குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து செல்லும் வகையில் சிறப்பு பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நாளை தினம் அரியலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ள ஆடித்திருவாதிரை விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu