அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாள் விடுமுறை

அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாள் விடுமுறை
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாள் விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடம் ஆகிய அனைத்திற்கும் "திருவள்ளுவர்" தினமான 15.01.2022 (சனிக்கிழமை) அன்றும், "வள்ளலார்" நினைவு தினமான 18.01.2022 (செவ்வாய்கிழமை) அன்றும் மற்றும் "குடியரசு தினமான" 26.01.2022 (புதன்கிழமை) அன்றும் உலர்தினமாக அறிவிக்கப்படுகிறது/

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!