சித்தியை கொலை செய்த, மனநலம் பாதித்தவர், தற்கொலை செய்து கொண்டார்

சித்தியை கொலை செய்த, மனநலம் பாதித்தவர், தற்கொலை செய்து கொண்டார்
X
அரியலூர் மாவட்டம் ஆங்கினூர் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தனது சித்தியை வாயிலேயே வெட்டி கொடூர கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஆங்கினூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் குமார்(37). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. அசோக்குமாரின் சித்தப்பா பழனிச்சாமி 10வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார்.

இந்தநிலையில், சித்தி அமராவதி(45) அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணியாற்றிவருகின்றார். ஒரே வீட்டில் குறுக்கே சுவர் எழுப்பி இரண்டு வாசல்களை வைத்து அசோக்குமாரின் தந்தையும், சித்தப்பாவும் பிரித்துகொண்டதில், தந்தைபாகத்தில் அசோக்குமாரும், சித்தப்பா பாகத்தில் அவரது சித்தி அமராவதியும் தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அசோக்குமார் கடந்த 10 நாட்களாக மாத்திரை சாப்பிடவில்லை என கூறப்படுகின்றது. வீட்டில் உள்ளவர்கள் ஆடு மேய்க்க வெளியில் சென்ற நிலையில் அசோக்குமார் வயலில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அமராவதி வீட்டு வாசலில் அமர்ந்து சமையல் செய்வதற்கு அரிசி பொடைத்துள்ளார். அசோக்குமார் வீட்டிற்கு செல்ல, அமராவதி வீட்டை கடந்துதான் செல்ல வேண்டும்.

அப்போது அமராவதி ஏதோ கூறியதால் ஆத்திரமடைந்த அசோக்குமார் தான் கையில் வைத்திருந்த அருவாளை கொண்டு அமராவதியின் வாயிலேயே பல முறை வெட்டி கொடூரகொலை செய்துள்ளார்.

பின்னர் அச்சத்தில் அசோக்குமார் தனது வீட்டில் இருச்த பூச்சி மருந்தை குடித்து தானும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிராமத்தினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலிசார் இருவரின் உடல்களையும், உடற்கூறு ஆய்விற்காக அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மேலும் இக்கொலைக்கு வேறுஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!