நகர் ஊரமைப்புத்துறை துணை இயக்குனர் தன்ராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
தன்ராஜின் வீட்டில் திடீர் சோதனை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்புத்துறை.
புதுக்கோட்டை மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்புத்துறை துணைஇயக்குனராக பணியாற்றுபவர் தன்ராஜ். இவர் கூடுதலாக தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நகர் ஊரமைப்புத்துறை துணைஇயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு அரியலூர் ஸ்டேட் பேங்க் பின்புறம் உள்ளது. இன்று காலை 7.30 மணி அளவில் அரியலூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான போலீசார் தன்ராஜின் வீட்டில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து இன்று திடீர் சோதனை நடத்தி வருவதாக தெரிய வருகிறது.
நகர் ஊரமைப்பு துறை இயக்குனர் தன்ராஜ் சொந்தமான ஆறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். அரியலூர் நகரில் ஸ்டேட் பேங்க் பின்புறம் உள்ள தன்ராஜின் வீடு மற்றும் ஜெயங்கொண்டம் சாலையில் அவரது மகன் நடத்தி வரும் வாணி ஸ்கேன் சென்டர் மற்றும் அரியலூர் புறவழிச் சாலையில் உள்ள வாணி மஹால் மற்றும் அவரது சொந்த கிராமமான பெரம்பலூர் மாவட்டம் கூத்தூரில் உள்ள வீடு மற்றும் தோட்டவயல்கள் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 36 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே திருச்சி, கோயம்புத்தூர், நாமக்கல் உள்ளிட்ட பலமாவட்டங்களில் பணியாற்றியுள்ள தன்ராஜ், தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர் மற்றும் ஊரமைப்புத்துறை துணைஇயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் கூடுதலாக தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நகர் ஊரமைப்புத்துறை துணைஇயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.
அடுத்தமாதம் ஓய்வுபெறும் நிலையில் லஞ்சஒழிப்புத்துறை போலிசார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சோதனை நடத்தி வருவது அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu