காவல்துறை சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு

காவல்துறை சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
X

அரியலூர் மாவட்ட எஸ்பி கா.பெரோஸ் கான் அப்துல்லா தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நீர்மோர் வழங்கினார்.


அரியலூர் மாவட்ட எஸ்பி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நீர்மோர் வழங்கினார்

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அரியலூர் நகர அண்ணா சிலை அருகே காவல்துறை உணவகத்தின் முன்பாக கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்படும் வகையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா திறந்து வைத்து , பொது மக்களுக்கு, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நீர்மோர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் அரியலூர் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் மணவாளன், அரியலூர் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பத்மநாபன் முன்னிலை வகித்தார்கள்.

Tags

Next Story