அரியலூர்: மாவுப்பூச்சி தாக்குதலால் அழிந்த கரும்பு பயிர்களுக்கு நிவாரணம்

அரியலூர்: மாவுப்பூச்சி தாக்குதலால் அழிந்த கரும்பு பயிர்களுக்கு நிவாரணம்
X

திருமானூரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவுப்பூச்சி தாக்குதல் அழிந்த கரும்பு பயிருக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூர் மாவட்டம் திருமானூரில் நடந்த தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட ஆலோசனைக்கூட்டத்தில் மாவுப்பூச்சி தாக்குதலால் அழிந்து போன கரும்பு பயிர்களுக்கு, அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கரும்பாயிரம் தலைமை வகித்தார். செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் சிவகுரு, மாநில குழு உறுப்பினர் மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் வைத்திலிங்கம் வரவேற்றார். சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கத்தின் வளர்ச்சி, செயல்பாடுகள் பற்றி பேசப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில், சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையின் கரும்பு விவசாயிகள் சங்கம் மண்டலம் வாரியாக அமைப்பது. புதிய உறுப்பினர்கள் பதிவு செய்வது. கோத்தாரி சர்க்கரை ஆலையில், 2020-21 ஆண்டு பருவத்தில் பதிவு செய்து, விவசாயிகள் பயிரிட்ட கரும்புகளில் மாவுப் பூச்சி தாக்கி கரும்புகள் அழிந்து போனதால், பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஆலைக்கு பதிவு செய்த கரும்புகளை பதிவு அடிப்படையில் வெட்ட வேண்டும் ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 மத்திய அரசு வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்