லஞ்சம் பெற்ற வழக்கில் சார்பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

லஞ்சம் பெற்ற வழக்கில் சார்பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
X

பைல் படம்.

அரியலூரில் லஞ்சம் பெற்ற வழக்கில் சார்பதிவாளருக்கு 3ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

அரியலூர் மாவட்டம்,நாயக்கர்பாளையத்தை சேர்ந்த நீலமேகம்-கொளஞ்சி தம்பதியினர் பதிவு செய்யப்பட்ட குடும்ப தான தொகையினை பெறுவதற்க்காக அரியலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்த நிலையில் அதனை பெறுவதற்கு கடந்த 04.11.2015 அன்று சார்பதிவாளர் சுபேதார்கான் 4,500 ரூபாய் லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு இன்று தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன் குற்றம் நிரூபிக்கப்பட்டதின் அடிப்படையில் முன்னாள் சார்பதிவாளர் சுபேதார்கானுக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனையும், 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil