செந்துறை அருகே மாணவி குளத்தில் விழுந்து தற்கொலை

செந்துறை அருகே மாணவி குளத்தில் விழுந்து தற்கொலை
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குளத்தில் விழுந்து பிளஸ்1 மாணவி நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமிநாரயணன் மகள் காவியா(எ) கார்முகில்(16). இவர், சென்னையில் தனியார் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். படிக்க கஷ்டமாக உள்ளது என கூறி, அண்மையில் கார்முகில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனிடையே, படிப்புக்கான முழு பணமும் செலுத்தப்பட்டு விட்டது. படிப்பை பாதியில் விடக்கூடாது. படிப்பில் கவனம் செலுத்து என பெற்றோர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் கார்முகிலை காணவில்லை. இதையடுத்து பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே நேற்று காலை சிறுகடம்பூர் செல்லியம்மன் கோயில் அருகே உள்ள குளத்தில் இறந்த நிலையில் கார்முகிலின் உடல் மிதந்துள்ளது. தகவலறிந்து வந்த இரும்புலிக்குறிச்சி போலீஸார் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai future project