அரியலூரில் மாநில தகவல் ஆணையர் 32 மேல் முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை

அரியலூரில் மாநில தகவல் ஆணையர் 32 மேல் முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை
X

அரியலூரில் மாநில தகவல் ஆணையர் தனசேகரன் மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தினார்.

மாநில தகவல் ஆணையர் தனசேகரன் அரியலூர் மாவட்டத்தில் 32 மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தினார்.

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் பி.தனசேகரன் அரியலூர் மாவட்டத்திற்கு வந்தார். 07.12.2021 மற்றும் 08.12.2021 ஆகிய இரு நாட்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன்கீழ் நிலுவையில் உள்ள தகவல் ஆணைய மேல் முறையீட்டு மனுக்கள் தொடர்பாக மனுதாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை செய்தார்.

இந்த விசாரணையில் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை மற்றும் இதர துறைகளில் உள்ள 32 மேல்முறையீட்டு மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!