அரியலூருக்கு மாநில தொண்டு நிறுவனம் 15ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கியது
அரியலூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கு 15 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை கலெக்டர் ரத்னாவிடம் மாநில தொண்டு நிறுவன அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழங்கினர்.
மாநில தொண்டு நிறுவனம் (State NGO Co-ordination Committee) சார்பில் அரியலூர் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வரும் கோவிட் சிகிச்சை மையத்திற்கு வழங்க 15 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னாடம் ஒப்படைத்தனர்.
இக்கருவி மூலம் ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நபர்களின் சிகிச்சைக்காக சிலிண்டர் இல்லாமல் காற்றிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்து, நோயாளிகளுக்கு வழங்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.
மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் பிற உதவி தேவைப்படும் நபர்களின் வசதிகளுக்காக அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர்கள் இதுபோன்ற தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வர வேண்டும் எனவும்,
இந்த ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகளை வழங்கிய அமைப்பினர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.வீ.சி.ஹேமசந்த் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu