இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதை மறுபரிசீலனை செய்ய திருமாவளவன் கோரிக்கை

இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதை மறுபரிசீலனை செய்ய திருமாவளவன் கோரிக்கை
X

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் திருமாவளவன்.

இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என தொல்.திருமாவளவன் கூறினார்.

அரியலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைக்க வந்த தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்

தமிழக அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் சிறந்த முறையில் பல்வேறு அம்சங்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களில் சிறப்பான நிர்வாகத்தின் மூலம் வருவாய் பற்றாக்குறையை குறைத்து இருப்பது பாராட்டுக்குரியது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு நிதி உதவி வழங்குவது இயல்பான ஒன்றுதான். ஆனால் இந்தியாவுக்கு எதிராக சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து கொண்டு இலங்கை அரசு பல்வேறு நெருக்கடிகளையும் அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர். இந்தியாவுக்கு எதிராகவும் இலங்கை தமிழர்களுக்கு எதிராகவும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வரும் இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பரிசீலினை செய்ய வேண்டும்.

உக்ரைனில் போரின் காரணமாக இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முழுச் செலவையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

Tags

Next Story