குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில்கடன் முகாம்

குறு சிறு மற்றும் நடுத்தர  தொழில்களுக்கான சிறப்பு தொழில்கடன் முகாம்
X

பைல் படம்.

திருச்சி கிளை அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில்கடன்முகாம் 02.09.2022 வரை நடைபெற உள்ளது

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின்கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

திருச்சி கிளை அலுவலகத்தில் (33, K.R.T பில்டிங் இரண்டாவது தளம், பிராமினேட் ரோடு, கண்டோன்மென்ட், திருச்சி 620001) குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில்கடன் முகாம் 02.09.2022 வரை நடைபெற உள்ளது.

இச்சிறப்பு தொழில்கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி-யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும்.

இந்தமுகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த அரியவாய்ப்பினை புதிய தொழில்முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறும், மேலும் தகவலுக்கு 0431-2460498, 4030028, 9443110899, 9444396815 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story