/* */

அரியலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது

அரியலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில்  கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது
X

ஈஸ்வரி

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி கஞ்சா மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கையில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூர் நகர காவல் ஆய்வாளர் அலாவுதீன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருக்கும் பொழுது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (35) என்பவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் பின்புறத்தில் கஞ்சா விற்பது தெரியவந்ததை அடுத்து ஈஸ்வரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.




இதனைத்தொடர்ந்து அரியலூர் ரயில்வே கேட் அருகில் ஸ்ரீதர்(23) மற்றும் தமிழ்ச்செல்வன்(21) ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்ததால், இருவரையும் அரியலூர் நகர காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.


Updated On: 10 Dec 2021 10:49 AM GMT

Related News