/* */

அரியலூர் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

அரியலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்களில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் வருகிற 20-ந்தேதி ஏலம் விடப்படுகிறது.

HIGHLIGHTS

அரியலூர் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்
X

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா.

அரியலூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட வாகனங்களை 20.10.2021ம் தேதி காலை 10.00 மணி முதல் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) முன்னிலையில் 47 இரண்டு சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்.

அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமல்பிரிவு, அரியலூர் மாவட்டம் அவர்களின் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புஎண். (9498197738 - 9498106586).

ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 20.10.2021 காலை 08.00 மணிக்கு ரூ1,000 முன்தொகை செலுத்தி தங்களது பெயர் முகவரியை பதிவு செய்து கொள்ளவேண்டும்.ஏலத்தில் கலந்துகொள்பவருக்குஅடையாள எண் கொண்டவில்லை வழங்கப்படும்.

பதிவு செய்துகொண்டவர் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ளலாம் அவருடன் பிறருக்குஅனுமதியில்லை.வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவர் ஏலத்தொகையுடன் சேர்த்து பிற்பகல் 3.00 மணிக்குள் உரிய அலுவலரிடம் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் வைப்புத் தொகை கழித்துக்கொள்ளப்படும்.

வாகனத்தை எடுத்தவர் உரிய தொகையை செலுத்த தவறினால் வைப்புத்தொகை திருப்பிதரப்படமாட்டாது.ஏலம் ரூ100 இன் மடங்கில் கேட்கப்படவேண்டும்.வாகனத்துடன் வாகனம் ஏலத்தில் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும் வாகனத்தின் பதிவு சான்று வழங்க இயலாது.

ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலர்களால் முடிவுசெய்யப்படும்.பொது ஏலத்தில் காவல்துறைசார்ந்த எவரும் கலந்துகொள்ள அனுமதியில்லை. வாகனங்களை18.10.2021ம்தேதிகாலை 10.00 மணிமுதல் பார்வையிடலாம்.

ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் அடையாளஅட்டையின் நகலை தவறாமல் கொண்டுவரவேண்டும்,

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 14 Oct 2021 5:50 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  5. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  6. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  7. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வைட்டமின்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமாம்! எப்படி
  10. ஈரோடு
    தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு