75 என்ற எண்ணில் நின்று யோகா செய்து கொடிவணக்கம் செலுத்திய பள்ளிமாணவர்கள்

75  என்ற எண்ணில் நின்று யோகா செய்து கொடிவணக்கம் செலுத்திய பள்ளிமாணவர்கள்
X

75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர் 75 என்ற எண்ணில் நின்று யோகா செய்தும் கொடி வணக்கம் செலுத்தியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.


சிறப்புவிருந்தினராக தங்க.சண்முகசுந்தரம் மற்றும் பி.வினோத்ராஜ் கலந்து கொண்டு சுதந்திரம் பெற்ற தியாகிகளை நினைவு கூர்ந்தனர்

அரியலூர் மாவட்டம், கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 என்ற எண்ணில் 450 மாணவ மாணவியர்கள் நின்று யோகா செய்தும், கொடி வணக்கம் செலுத்தியும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்து காண்பித்தனர்.இந்நிகழ்ச்சியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 220 பள்ளி மாணவியர்கள் 7 என்ற எண்ணிலும் 5 என்ற எண்ணில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 230 மாணவர்களும் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரெ.செல்வக்குமார் தலைமை வகித்தார். 75 என்ற எண்ணை வடிவமைத்து உதவி செய்த ஓவிய ஆசிரியர் மு. மாரியப்பன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மூ.சுரேஷ்குமார், ஆசிரியர்கள் கி.பிரேமா, சி. ராதிகா, கோ.சுகந்தி, ம.முருகேசன், த.சுந்தராம்பாள், வி.இ.வைதேகி, ப.செல்வராஜ், மே.பாஸ்டின் சர்ச்சில், ச.நிறைமதி, த.முருகானந்தம், த.மாலா கிறிஸ்டி ரோசலின், ச.சுரேஷ்பாபு, க.நிர்மலா, பெ.அழகுதுரை உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் தங்க சண்முக சுந்தரம் மற்றும் பி.வினோத்ராஜ் கலந்து கொண்டு 75 வது சுதந்திர தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுதந்திரம் பெற்ற தியாகிகளை நினைவுகூர்ந்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்