ஜெயங்கொண்டம் சாலையோர கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வினியோகம்

ஜெயங்கொண்டம் சாலையோர கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வினியோகம்
X

கோப்பு காட்சி படம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில், சாலையோர கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில், சாலையோரங்களில் கடைகள் வைத்திருப்போருக்கு விற்பனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் நகரில் சாலையோரங்களில் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் விற்பனை சான்றிதழ்களை எம்/எல்/ஏ க.சொ.க.கண்ணன், ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் வ.சுபாஷினி ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு சாலையோர கடைகள் வியாபாரிகள் சங்க தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். கவுரவ தலைவர் இலக்கியதாசன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். அச்சங்கத்தின் தேசிய கூட்டமைப்பு செயலாளர் வீ.மகேஸ்வரன், சங்க பொருளாளர் ராமையன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!