தகவல்அறியும் உரிமைச்சட்டத்தில் மனுதாரர் தகவல்கள்பெற கட்டணமுறைஅறிவிப்பு

தகவல்அறியும் உரிமைச்சட்டத்தில் மனுதாரர் தகவல்கள்பெற கட்டணமுறைஅறிவிப்பு
X
பணம், காசோலை அல்லது கோட்பு வரைவோலையாக கட்டணம் செலுத்தி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மனுதாரர் தகவல்கள் பெறலாம்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 7(1) ன் படி மனுதாரர் கோரும் தகவல்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் விவரம் வெளியிடப்பட்டது.

இது தொடரபாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்ட செய்திகுறிப்பில்,

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 7(1) ன் படி மனுதாரர் கோரும் தகவல்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய விபரம் மனிதவள மேம்பாட்டுத் துறை, தலைமை செயலகம், சென்னை அவர்களின் கடிதத்தில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரர் கோரும் தகவல்கள் பெற அதற்கான கட்டணத்தை நேரடியாக பணமாக வழங்கலாம், காசோலையாக அல்லது கோட்பு வரைவோலையாக "பொது தகவல் அலுவலர், பொது தகவல் அலுவலகம் பெயர்" என்ற பெயரில் வழங்கலாம். கருவூல செலுத்துச்சீட்டு வழியாக கட்டணத்தை கீழ்கண்ட தலைப்பின் கீழ் செலுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

"0070 Other Administrative Services -60 Other செர்விக்ஸ்.

118 Receipts under Right to Information Act, 2005.

AA-Collection of Fees-Under Right to Information (Fees) Rules, 2005.

227-Non- Taxation Fees -39 Translation and Printing Fees"

[IFHRMS DPC: 0070 60 118 A2273

Old DPC: 0070 -60-118-AA-0005]

Tags

Next Story