அரியலூர் அருகே கார் மோதி ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்பு உதவியாளர் பலி
உயிரிழப்பு விபத்து ஏற்படுத்திய கார்.
அரியலூர் மாவட்டம் விளாங்குடி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன் குமார்(63). ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்பு உதவியாளரான இவர், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், அங்குள்ள சுகாதார நலையம் அருகேயுள்ள குடிநீர் குழாயில் தண்ணீரை பிடித்துக கொண்டு, வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் திருச்சி-சிதம்பரம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த கயர்லாபாத் காவல் துறையினர், சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu