அரியலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையளவு
பைல் படம்.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், தொடர்ந்து பலமுறை மணிக்கணக்கில் கொட்டித் தீர்த்த கனமழையால், வெள்ளநீர் பெருக்கெடுத்து தெருக்களில் ஓடியது.
நேற்று பெய்த கனமழையில் அரியலூரில் 51.4மி.மீ, திருமானூரில் 70.8மி.மீ, செந்துறையில் 65மி.மீ, ஜெயங்கொண்டம் 35 மி.மீ ஆண்டிமடம் 36மி.மீ, என மாவட்டம் முழுவதும் 258.2மி.மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் பெய்யும் சராசரி மழையளவு 187.5 மில்லி மீட்டர் என்பதை கடந்த 25 தினங்களில் மட்டும் 275.88 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுபோன்று வடகிழக்கு பருவமழை சராசரியாக அரியலூர் மாவட்டத்திற்கு 578.3 மில்லிமீட்டர் மழை என்பது 712.96 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தொடரும் கனமழையால் அரியலூர் மாவட்டத்தில் 35 குடிசை வீடுகள் பகுதியாகவும்,14 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளது. மாணவர்களின் சிரமம் கருதி, இன்று ஒருநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்திரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu