அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளி ஒருவருக்கு மடக்கு சக்கர நாற்காலியை கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 428 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் சோழன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த கருப்புசாமி என்ற மாற்றுத்திறனாளி தனக்கு மடக்கு சக்கர நாற்காலி வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்ததை தொடர்ந்து, மேற்படி நபரின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றும் வகையில் ரூ.5,910 மதிப்புடைய மடக்கு சக்கர நாற்காலியை மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu