அரியலூர் கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

அரியலூர் கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆன் லைனில் பாடம் நடத்தி விட்டு ஆஃப்லைனில் தேர்வை வைப்பதை கண்டித்தும் ஆன்லைன் தேர்வு வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து முழக்கமிட்டனர்.

இல்லை எனில் இந்த பருவ தேர்வை ரத்து செய்து நேரடி பாடம் நடத்திவிட்டு தேர்வை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதில் 300 க்கும்‌மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி மதன் மாணவர்களின் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுக்க கூறினார். ஆன்லைன் தேர்வு வைக்க வேண்டும் என மாணவர்கள் மனு எழுதி வழங்கினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!