நான்கு கிராமங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி

நான்கு கிராமங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி
X

நெல் கொள்முதல் நிலையம்.

ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி, சோழமாதேவி மற்றும் பிள்ளைப்பாளையம் ஆகிய 4 கிராமங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் கரீப் KMS 2021-2022 முன்பட்ட குறுவை பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு முதல் கட்டமாக அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி, சோழமாதேவி மற்றும் பிள்ளைப்பாளையம் ஆகிய நான்கு கிராமங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட கிராமங்களில் 22.07.2022 முதல் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகில் உள்ள விவசாயப் பெருமக்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு