இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் தொண்டர் அணி பயிற்சி முகாம்

Communist Party | Training Camp
X

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் தொண்டர் அணி பயிற்சி முகாம் அரியலூரில் நடைபெற்றது.


Communist Party - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் தொண்டர் அணி பயிற்சி முகாம் மாவட்டத் தலைநகர் அரியலூரில் நடைபெற்றது.

Communist Party -இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் தொண்டர் அணி பயிற்சி முகாம் மாவட்டத் தலைநகர் அரியலூரில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், மக்கள் தொண்டர் படை மாநில தலைவரும்மான M.இலகுமய்யா கலந்து கொண்டு இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்தார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநில செயலாளர் க.பாரதி பயிற்சி முகாமை தொடங்க வைத்தார்.

பெ.மணிகண்டன், மா.பெரியசாமி, ந. ரெங்கநாதன், ர.சூர்யா, ரா.பிரகாஷ், கு.விக்னேஷ், திருப்பதி, R. பழனிவேல், M.மாணிக்கம்,பரசுராமன், லெனின், ஸ்டாலின், உட்பட இருபதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

AITUC மாவட்ட பொதுச் செயலாளர் T.தண்டபாணி, சிபிஐ மாவட்ட செயலாளர் சொ.ராமநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் திருமானூர் G.ஆறுமுகம், அரியலூர் நகராட்சி ரா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

பயிற்சி பெறும் தொண்டர்கள், திருப்பூரில் ஆகஸ்ட் 9 இல் நடைபெறும் சிபிஐ மாநில மாநாட்டு செந்தொண்டர் பேரணி அணிவகுப்பில் பங்கேற்க தயாராகி வருகிறார்கள்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!