அரியலூரில் கருணாநிதியின் நினைவுநாளை முன்னிட்டு அமைதி ஊர்வலம்

அரியலூரில் கருணாநிதியின் நினைவுநாளை முன்னிட்டு அமைதி ஊர்வலம்
X

அரியலூர் புறவழிச் சாலையில் உள்ள அரியலூர் மாவட்ட அலுவலகத்தில் அமைந்துள்ள கருனாதிதி  திருஉருவ சிலைக்கு மலர் தூவிஅஞ்சல் செலுத்தினர்.


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவுநாளை முன்னிட்டு அரியலூர் நகர திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவுநாளை முன்னிட்டு அரியலூர் நகர திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அரியலூர் நகர கழகச்செயலாளர் இரா. முருகேசன் தலைமையில் தேரடியில் புறப்பட்ட ஊர்வலம் பேருந்துநிலையம் அருகில் அண்ணா சிலை அருகில் நிறைவடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு திமுக பொருப்பாளர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்

இதன்பின்னர் அரியலூர் புறவழிச் சாலையில் உள்ள அரியலூர் மாவட்ட அலுவலகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் திருஉருவ சிலைக்கு மலர் தூவிஅஞ்சல் செலுத்தினர்.

இந்நிகழ்சியில்அரியலூர் எம்எல்ஏ கு. சின்னப்பா, திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா.பாலு, ஒன்றிய செயலாளர்கள் கோ.அறிவழகன், அன்பழகன், இரா.கென்னடி, அசோக் சக்கரவர்த்தி, நகர செயலாளர் முருகேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா, மதிமுக மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, மதிமுக மாவட்ட துணை செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன், நகர செயலாளர் மனோகரன், மதிமுக ஒன்றிய செயலாளர் பி சங்கர் ராமநாதன், வழக்கறிஞர் கதிரவன் மற்றும் மாவட்ட, ஒன்றிய , நகர கழக நிர்வாகிகள் பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள் . நகரகழகத் தோழர்கள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!