அரியலூர் மாவட்டம் முழுவதும் நாளை பட்டா திருத்த சிறப்பு முகாம்கள்
அரியலூர் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கென துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
முகாமில் பெறப்படும் சிறு கணினி திருத்தம் சார்ந்த மனுக்களுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்படும்.
வட்டம் வாரியாக 03.12.2021 அன்று (வெள்ளிக்கிழமை) முகாம் நடக்கவுள்ள கிராமங்களின் விவரம்:
அரியலூர் வட்டத்தில் ஆலந்துறையார்கட்டளை மற்றும் ஆண்டிப்பட்டாக்காடு கிராமங்களுக்கு ஆலந்துறையார்கட்டளை கிராம சேவை மைய கட்டிடத்திலும், சுள்ளங்குடி மற்றும் ஏலாக்குறிச்சி கிராமங்களுக்கு ஏலாக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், செந்துறை வட்டத்தில் பிலாக்குறிச்சி மற்றும் கீழமாளிகை கிராமங்களுக்கு பிலாக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், உடையார்பாளையம் வட்டத்தில் இளையபெருமாள்நல்லூர் மற்றும் முத்துசேர்வாமடம் கிராமங்களுக்கு இளையபெருமாள்நல்லூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் கோடங்குடி(தெ) மற்றும் நாயகனைப்பிரியாள் கிராமங்களுக்கு கோடங்குடி(தெ) கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் ஆண்டிமடம் வட்டத்தில் வாரியங்காவல் மற்றம் தேவனூர் கிராமங்களுக்கு வாரியங்காவல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் முகாம் நடக்கவுள்ளது.
மேற்படி இந்த சிறப்பு முகாமில் சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் மனுக்கள் அளித்து பயன் அடையுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu