/* */

அரியலூர்: மெச்சத் தகுந்த பணி செய்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

அரியலூர் மாவட்டத்தில் மழைபேரிடர் காலங்களில் மெச்சத்தகுந்த பணிசெய்தவர்களுக்கு போலீஸ் ஐ.ஜி. பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

HIGHLIGHTS

அரியலூர்: மெச்சத் தகுந்த பணி செய்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
X

அரியலூர் மாவட்டத்தில் மழைபேரிடர் காலத்தில்  மெச்சத்தகுந்த பணிசெய்த தன்னார்வலர்களுக்கு மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


அரியலூர் மாவட்டம் காரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் சிக்கி கொண்ட போது காவல்துறையினருடன் இணைந்து காப்பாற்ற உதவிய தன்னார்வலர்கள் கிருஷ்ணமூர்த்தி, தீபன்ராஜ் ஆகியோர்களுக்கும்,அனைகுடம் கிராமத்தைச் சேர்ந்த குஞ்சிதபாதம் என்கிற விசிறி தாத்தா (80) என்பவருக்கு பேரிடரால் பாதிப்படைந்த போது 6,000/- ரூபாய் ரொக்கமாக வழங்கி உதவி புரிந்த அன்னை தெரசா கல்வி குழுமம் தாளாளர் முத்துக்குமரனுக்கும்,

கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்று திட்டில் வெள்ளத்தால் சிக்கிய 56 பசுமாடுகளை தீயணைப்புத் துறையுடன் இணைந்து காப்பாற்ற உதவிய பாஸ்கர் (52), பரமசிவம் (46), சரவணன் (35), அருண் (25), பிரவீன் (22) ஆகியோருக்கும்,

சாத்தம்பாடி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் திட்டில் வெள்ளத்தால் சிக்கிய 60க்கும் மேற்பட்ட பசுமாடுகளை தனிஒருநபராக காப்பாற்றி கரை சேர்த்த முருகனின் (30)

மெச்சத் தகுந்த செயலை பாராட்டும் விதமாக மேற்குறிப்பிட்ட அனைவரையும்அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி.பாலகிருஷ்ணன் நேரில் பாராட்டுக்களை தெரிவித்து, சான்றிதழ் வழங்கினார்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் உடன் இருந்தனர்.

Updated On: 2 Dec 2021 7:03 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...