பழைய குலக்கல்வி திட்டம் தான் புதிய கல்விக்கொள்கை - கி.வீரமணி பேச்சு

அரியலூர் அண்ணா சிலை அருகில் நடந்த நீட் தேர்வு எதிர்ப்பு கூட்டத்தில் கி.வீரமணி உரையாற்றினார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய கல்வி கொள்கையை கைவிடக்கோரியும், திராவிடர் கழகம் கட்சி சார்பில் நாகர்கோவில் முதல் சென்னை வரை மாநில உரிமை மீட்பு பரப்புரை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் அரியலூர் நகரில் பேரறிஞர் அண்ணா சிலை அருகில், "நீட் தேர்வு எதிர்ப்பு " புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணம் வரவேற்பு பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
இந்த கூட்டத்தில் கி. வீரமணி பேசும்போது புதிய கல்விக் கொள்கை தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் மிகப்பெரிய அளவிற்கு கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. பழைய குலக்கல்வி திட்டத்திற்கு வைத்திருக்கிற புதிய பெயர்தான் இந்த புதிய கல்விக் கொள்கை. காமராஜர் ஆட்சி காலத்தில் குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது. அதை மீண்டும் மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கிறது. நீட் தேர்வினால் ஏராளமான ஏழை மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். நீட் தேர்வை போல பல்வேறு நுழைவுத் தேர்வுகளை கொண்டு வரபட்டுள்ளாõல், இனி கோச்சிங் சென்டர்கள் என்ற பெயரில் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் ஏராளமாக உருவாகும் சூழல் ஏற்படும். கல்வி வியாபாரமாக பட்டுவிடும். இதனை எதிர்க்கக்கூடிய ஒரே ஒரு ஆட்சி திராவிட மாடல் கொள்கையுடன் கூடி தமிழக ஆட்சி தான். இந்த நல்ல கொள்கைதான், மத்திய அரசுக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கும் எதிராக உள்ளது. ஒரு மாநிலத்தின் ஆளுநர் சுமூகமாக செயல்பட வேண்டும் .ஆனால் தமிழக ஆளுநர் அவ்வாறு செயல்படவில்லை. நீட் தேர்வு குறித்த தீர்மானத்தை அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவது ஏற்புடையதல்ல என்றார்.
உடன் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், தி.மு.க. சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், திராவிட கழக, தோழமை கட்சியினர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu