அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் 54வது தேசிய நூலக வார விழா நிறைவு
அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற நூலக வார நிறைவு விழாவில் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் தமிழினி இராமகிருஷ்ணன் பேசினார்.
அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் ஒரு வாரமாக நடைபெற்று வந்த தேசிய நூலக வார விழா நிறைவுப் பெற்றது.
கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த இவ்விழாவில், புத்தகக் கண்காட்சி, பள்ளி மாணவ,மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை மற்றும் வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு நிறைவு நாள் விழாவில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த நிறைவு நாள் விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் ரா.சண்முகநாதன் தலைமை வகித்தார். அன்பு பால் பண்ணை நிர்வாகி ரெ.செல்வராஜ், சி.ராமசாமி, புவியியலாளர் சந்திரசேகர், அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை தமிழாசிரியர் தமிழினி ராமகிருஷ்ணன், ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியர் ம.ராவணன், நகைச்சுவை துணுக்கு எழுத்தாளர் கலியபெருமாள், பத்மஸ்ரீ பள்ளி தாளாளர் சி.பத்மபிரியா ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்கலையும் வழங்கினர்.
பத்மஸ்ரீ பள்ளி தாளாளர் சி.பத்மபிரியா பேசுகையில், கல்வி என்ற பெரும் கடலை தனக்குள் தேக்கி வைத்துள்ள நூலகங்கள் தன்னை தேடி வரும் வாசகர்களின் அறிவு பசியினை போக்கி அவர்களை பூரணமான மனிதர்களாக சமூகத்துக்கு தருகின்றன. எனவே நல்ல பயனுள்ள நூல்களை படித்து சமுதாயத்துக்கு தொண்டு ஆற்ற வேண்டும் என்றனர். முன்னதாக முதல்நிலை நூலகர் ஸன்பாஷா வரவேற்றார்.முடிவில் நூலகர் ந.செசிராபூ நன்றி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu