நம்மாழ்வார் நினைவு தினத்தில் மரபு வகை அரிசிகள் குறித்து விழிப்புணர்வு

நம்மாழ்வார் நினைவு தினத்தில் மரபு வகை அரிசிகள் குறித்து விழிப்புணர்வு
X

திருமானூர் அருகே நம்மாழ்வார் நினைவு தினத்தையொட்டி மரபு வகை அரிசிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


அரியலூர் மாவட்டத்தில் நம்மாழ்வார் நினைவு தினத்தையொட்டி மரபு வகை அரிசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே நம்மாழ்வார் நினைவு தினத்தையொட்டி மரபு வகை அரிசிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருமானூர் அடுத்த வெற்றியூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மரபு வகை அரிசிகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூறப்பட்டது. நிகழ்ச்சியில், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க.சண்முக சுந்தரம், திரைப்பட இயக்குநர் ரவி, கல்லூரி பேராசிரியர் முத்துப்பாண்டியன் ஆகியோர் பங்கேற்று மரபு வகை அரிசிகளின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில், வெற்றியூர் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் அன்பு சந்திரன், வெற்றியூர் கிராம விவசாய சங்க நிர்வாகி காமராஜ் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஏர்கலப்பை,கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டன. முன்னதாக நம்மாழ்வார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிறைவாக ஆசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil