ரம்ஜான் பண்டிகை சிறப்புதொழுகையில் பெருந்திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

ரம்ஜான் பண்டிகை சிறப்புதொழுகையில் பெருந்திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
X

அரியலூர் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.

அரியலூர் பெரிய பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பெருந்திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு.

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றானதும், இரக்கம், அன்பு, சகோதரத்துவத்தை உணர்த்தும் ரமலான் நோன்பை கடந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் கடைபிடித்து வந்தனர். இதையடுத்து நேற்று மாலை பிறை தென்பட்டதையடுத்து இன்று இந்தியாவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் தங்களது நோன்பு முடிந்து இன்று ஈகைப் பெருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாக் கொண்டாடி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து ரம்ஜான் பண்டிகையையொட்டி அரியலூர் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்டனர். மேலும், தங்களது நண்பர்களும், உறவினர்களும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Tags

Next Story
the future with ai