அரியலூரில் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் நலத்திட்ட உதவி

அரியலூரில் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு  அமைச்சர் சிவசங்கர் நலத்திட்ட உதவி
X

அரியலூர் மாவட்டத்தில் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு  உதவி உபகரணங்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.


அரியலூர்மாவட்டத்தில் 150மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.46.89லட்சம் மதிப்பீட்டில் உதவி உபகரணங்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஏற்றம் பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினை தமிழ்நாடு முதலமைச்சர் தன்னிடமே வைத்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

அதன்படி, செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட 65 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8,12,500- மதிப்பில் திறன்பேசிகளும், 28 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.22,07,800 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,98,662 மதிப்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 7 மாற்றுத்தினாளிகளுக்கு ரூ.6,99,993 மதிப்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளும், 40 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,73,600 மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரகளும், 4 சிறப்பு பள்ளிகளுக்கு ரூ.96,960 மதிப்பில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டோருக்கான தகவல் பரிமாற்று சாதனங்களும் என மொத்தம் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.46,89,515 மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் வாழ்வை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளி உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உயர் ஆதரவு உதவித்தொகை, இலவச பேருந்து பயண அட்டை, வாசிப்பாளர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, வங்கி கடன் மானியம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மூன்றுசக்கர சைக்கிள், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலிக்கருவி, சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலி, ஊன்றுகோல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் 2021-2022ம் நிதியாண்டில் 5337 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.79.62 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசின் இதுபோன்ற நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், திருமானூர் ஒன்றியக்குழுத்தலைவர் சுமதிஅசோகசக்கரவர்த்தி, ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story