அமைச்சர் சிவசங்கருக்கு வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாராட்டு விழா

அமைச்சர் சிவசங்கருக்கு வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாராட்டு விழா
X

அரியலூர் மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் அமைச்சர் சிவசங்கருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.


அரியலூர் மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் அமைச்சர் சிவசங்கருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரியலூரில் மாவட்ட வழக்கறிஞர் மற்றும் குமாஸ்தா சங்கங்களின் சார்பில் அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு அச்சங்கத்தின் தலைவர் இராம.மனோகரன் தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர்கள் மணி, செல்வராஜ், எஸ்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

விழாவில் ஏற்புரையாற்றிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், வரும் நிதிநிலை அறிக்கையில் அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டட வலியுறுத்தப்படும். மேலும் மாவட்ட விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

விழாவில் அமைச்சருக்கும், அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பாவுக்கும் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

முடிவில் சங்கச் செயலர் முத்துகுமார் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story
ai for business microsoft