அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
X

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியை மாவட்ட எஸ்.பி.பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார்.



அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் நடந்த மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி முகாமை எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார்.

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட காவல் துறை சார்பில் மாணவிகளுக்காக தாற்காப்பு கலை ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமை தொடக்கி வைத்து எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகயைில் பெண்களின் முன்னேற்றம் பற்றி பேசினால் மட்டும் போதாது. ஏனென்றால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதலில் பெண்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் திடமாக இருக்க வேண்டும்.

எனவே, மாணவிகள் தங்களது நேரத்தை தேவையற்ற முறையில் செலவிடாமல், தங்களுக்கு தேவையான தற்காப்பு கலைகளை கட்டாயம் கற்றுக் கொண்டு தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சியானது பெண்கள் தன்னைத் தானே எப்படி பாதுகாத்துக் கொள்வது என்று மட்டும் சொல்லித் தரப்படுவதில்லை. மனரீதியாக பெண்கள் தயாராக வேண்டும் என்பதையும் சேர்த்தே கற்றுத்தரப்படுகிறது என்றார்.

பயிற்சியில் சிலம்பு, கராத்தே உள்ளிட்ட பயிற்சிகள் மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு அக்கல்லூரி முதல்வர் ஜெ.மலர்விழி தலைமை வகித்தார்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்