சுண்ணாம்புக்கல் சுரங்க விஸ்தீரண பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்
கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டம்.
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கருப்பூர் சேனாபதி கிராமத்தில் அமைந்துள்ள சரவணன், மேலாண்மை இயக்குநர், தண்டபானி சிமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், செயல்பாட்டில் இருக்கும் சுண்ணாம்புக்கல் சுரங்க விஸ்தீரணம் - 4.67.0 ஹெக்டேர் புல எண். 6/4, 8/3, 8/4A, 8/4B, 8/5A, 8/5B, 8/5C, 8/5E, 8/6A, 8/6B, 8/6C, 7 & 8, அரியலூர் மாவட்டத்தில் கருப்பூர் சேனாபதி கிராமத்தில் சுண்ணாம்புக்கல் எடுப்பதற்கான பொதுமக்கள் கருத்து கேட்புக்கூட்டம் கீழப்பழுவூர் கிராமம், அருணாச்சல நகர், தனலட்சுமி திருமண மஹாலில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இத்திட்டம் செயல்படுத்தும் முறைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
பங்கேற்ற பொதுமக்கள் மாசுக்கட்டுபாடுகள் குறித்தும் மற்றும் கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தங்களின் கோரிக்கைகள் குறித்தும் கருத்துக்களை பதிவு செய்தார்கள். பின்னர், இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை அளித்தனர்.
அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, பொதுமக்களின் நலன் கருதி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார். மேலும் பொது மக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகம், புதுதில்லி, அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (பொ) வெங்கடேசன், உதவிப்பொறியாளர் இளமதி, கோட்டாட்சியர் ஏழுமலை, வட்டாட்சியர் குமரையா மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu