அரியலூரில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா அ.தி.மு.க. சார்பில் கொண்டாட்டம்

அரியலூரில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா அ.தி.மு.க. சார்பில் கொண்டாட்டம்
X

அரியலூரில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அரியலூரில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது.

மறைந்த முதல்வரும், அ.தி.மு.க. மறைந்த பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 74 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரியலூர் பெருமாள் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.

முன்னாள் நகர்மன்றத் தலைவரும், நகரப்பொருளாருமான ஏ.எஸ்.எம் கண்ணன் தலைமையில் அம்மா பேரவை லோகராஜ் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் கே. சக்திவேல், எஸ்.சிவசங்கர், சீனிவாசன், கருப்பையா, சரவணன், வெங்கடேசன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். சுமார் 100பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!