அரியலூர் மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அ.தி.மு.க.வினர் அனுசரிப்பு

அரியலூர் மாவட்டத்தில்  ஜெயலலிதா நினைவு தினம் அ.தி.மு.க.வினர் அனுசரிப்பு
X

அரியலூரில் ஜெயலலிதா சிலைக்கு அவரது நினைவுநாளையொட்டி அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.



அரியலூரில் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் தாமரை ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அரியலூர் மாவட்டத்தில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர், அண்ணா சிலைகளுக்கு அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து லிங்கத்தடிமேடு கிராமத்தில் உள்ள வள்ளலார் ஆதரவற்றோர் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் செந்தில், மாணவரணி செயலாளர் சங்கர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பொ.சந்திரசேகர், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் பிரேம்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதேபோல், ஜெயங்கொண்டம், திருமானூர், செந்துறை, தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா படம் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி