அரியலூர் மாவட்டத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

அரியலூர் மாவட்டத்தில்  சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
X

அரியலூர் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

அரியலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் போலீசார் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழியை ஏற்றனர்.

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் டிசம்பர் -10 சர்வதேச மனித உரிமைகள் நாளை முன்னிட்டு இன்று அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி (மதுவிலக்கு அமலாக்க பிரிவு) தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழியை ஏற்றனர்.

அதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!