அரியலூர் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை

அரியலூர் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை
X

அரியலூர் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது.

அரியலூர் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் அரியலூர், திருமானூர், செந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில நாட்களாகவே மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில். மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் வாகன ஓட்டிகள் சாலையில் தேங்கிய மழை நீரால் வாகனத்தை இயக்கமுடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தற்பொழுது சம்பா நடவு பணிகள் நடைபெற்று வருவதால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மாவட்டத்தின் பலப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!