அரியலூர்: கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

அரியலூர்: கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை  அறிவிப்பு
X
அரியலூர் மாவட்டம் முமுவதும் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், தொடர்ந்து பலமுறை மணிக்கணக்கில் கொட்டித் தீர்த்த கனமழையால், வெள்ளநீர் பெருக்கெடுத்து தெருக்களில் ஓடியது.

நேற்று பெய்த கனமழையால் அரியலூரில் 36.8மி.மீ, திருமானூரில் 50.4மி.மீ, செந்துறையில் 34.6மி.மீ, ஜெயங்கொண்டம் 42மி.மீ ஆண்டிமடம் 18மி.மீ, என மாவட்டம் முழுவதும் 181.8மி.மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

இதனையடுத்து மாணவர்களின் சிரமம் கருதி, இன்று ஒருநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரியலூர் மாவட்டத்தில் விடுமுறை அளித்து கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story