அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்களில் கலந்துக் கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு மருத்துவர்கள் கொண்டு மாற்றுத்திறன் தன்மையினை அளவிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கிடும்
சிறப்பு மருத்துவ முகாம்அரசினர் மேல்நிலைப்பள்ளி திருமானூர் (21.10.2021),அரசினர் மேல்நிலைப்பள்ளி ஜெயங்கொண்டம் (26.10.2021),அரசினர் மேல்நிலைப்பள்ளி தா.பழூர் (27.10.2021)அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செந்துறை (28.10.2021)அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆண்டிமடம் (29.10.2021) ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
எனவே மாற்றுத்திறனாளிகள் புதிய தேசிய அடையாள அட்டை வேண்டுவோர் மற்றும் தேசிய அடையாள வைத்துள்ள நபர்கள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் பொருட்டு மாற்றுத்திறனாளிகள்தேசிய அடையாள அட்டை நகல்,முகம் மட்டும் தெரியகூடிய புகைப்படம் 4 (பாஸ்போர்ட் சைஸ்)
ஆதார் அட்டை நகல்,குடும்ப அட்டை நகல்,வாக்காளர் அடையாள அட்டை நகல்ஆகியவற்றுடன் சிறப்பு முகாம்களில் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu