ஒரு பெண் உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

ஒரு பெண் உட்பட   3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
X
பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 3பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவு

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்ட 3பேரை மாவட்ட எஸ்பி பரிந்துறையில் மாவட்ட கலெக்டர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் கட்ட பஞ்சாயத்து மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட புரட்சித் தமிழன் மற்றும் ராஜசேகர் ஆகியோரையும், அனுமதியின்றி கருக்கலைப்பு செய்த கிருஷ்ணவேணி என்பவரையும் ஜெயங்கொண்டம் போலிசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் மூவரையும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து திருச்சி மத்திய சிறையில் உள்ள மூன்று பேருக்கும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்திரவு நகல் வழங்கப்பட்டது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்