அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 197 மனுக்கள்

அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 197 மனுக்கள்
X

அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடந்தது.

அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 197 மனுக்கள் பெறப்பட்டது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று (08.11.2021) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 197 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!