அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுகோள்

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுகோள்

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி. (பைல் படம்)

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்காலிக ஆய்வக நுட்புநர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்ய கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பல்வேறு பரிவுகளுக்கு, ஆய்வக நுட்புநர்கள் மற்றும் இதரப்பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர்.

அதில், லேப் டெக்னீசியன் கிரேடு II பணியிடங்களுக்கு 31 பேர் நியமிக்கப்படவுள்ளனர். அதற்கான கல்வி தகுதி அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் ஆய்வக நுட்புநர் பட்டய படிப்பு.

வேன் ஓட்டுநர் பணியிடங்கள் 2. இதற்கு ஹெவி ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வார்டு பாய் பணியிடங்கள் 8, ஹாஸ்பிட்டல் தொழிலாளி பணியிடங்கள் 12, ஸ்ட்ரெச்சர் தாங்குபவர் பணியிடங்கள் 6, துப்புரவு பணியாளர் பணியிடங்கள் 19 ஆகியவை அனுமதிக்கப்பட்டுள்ளன. இதற்கு கல்வி தகுதி 8ம் தேர்ச்சி மற்றும் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் முதல்வர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரியலூர் என்ற முகவரிக்கு ஆதார் அட்டை மற்றும் கல்வித்தகுதி சான்றிதழ்களுடன் வரும் 19 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story