பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த சமூக சேவகர்களுக்கு தங்க பதக்கம்

பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த சமூக சேவகர்களுக்கு தங்க பதக்கம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி.

அரியலூர் மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த சமூக சேவகர்களுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட உள்ளது.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் 2022-ம் வருடம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம் மற்றும் சான்று வழங்கப்பட உள்ளதால் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள், சமூக சேவகர்களில் கீழ்காணும் தகுதியுடையவர்கள் 30.06.2022-க்குள் விண்ணப்பிக்கலாம்.

2022-ஆம் ஆண்டு சிறந்த சமூக சேவகர் (ம) சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுக்கு விண்ணபிக்க தேவையான விதிமுறைகள்: அதமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூகநலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம் பண்பாடு கலை, அறிவியல், நிர்வாகம், போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுன்றன. சமூக சேவை நிறுவனம் அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். 30.06.2022 பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்க இயலாது.

இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் https://awards.tn.gov.in விண்ணப்பித்து அதன் நகலினை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அறை எண்:20, தரைத்தளத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலத்தை தொடர்பு தொலைபேசி எண்.04329-228516-ஐ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story